அனோஜனின் மரண தண்டனை விவகாரம்: தமிழகத்தில் வலுக்கும் ஆதரவு
சவுதி அரேபியாவில் ஈழத்தமிழரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், தவறை உணர்ந்து மன்னிப்பு கோரிய பின்னரும் அனோஜனுக்கு மரணதண்டனை விதிப்பது கொடூரமானது என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அனோஜனின் விடுதலைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆதரவு
இதேவேளை, இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
"அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மார்க்கமான இஸ்லாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு, மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் சிவராசா அனோஜனை மரண தண்டனையிலிருந்து மீட்குமாறு தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அன்பையும், இரக்கத்தையும் போதிக்கும் மகத்துவம் மிக்க மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி அரேபிய நாடு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் சிவராசா அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும்! சவுதி நாட்டில் பணிபுரிந்து வந்த ஈழத்தமிழரான தம்பி சிவராஜா அனோஜனுக்கு அந்நாட்டு அரசு மரணத்தண்டனை விதித்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தனது தாய்நிலத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து பொருளாதாரத்தேடலுக்காக சவுதி நாட்டுக்குச் சென்ற தம்பி அனோஜன், மதம் சார்ந்தும், இறைக்கோட்பாடுகள் சார்ந்தும் விமர்சனத்தை வைத்து, சமூக வலைத்தளத்தில் விவாதித்ததற்காக அந்நாட்டு அரசால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். தம்பி அனோஜன் சமூக வலைத்தளத்தில் தான் எழுதியவைகளை உடனடியாக நீக்கியதோடு, அத்தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். விளைவை அறியாது, மற்றவர் உணர்வை காயப்படுத்தும் விதமான தன்னுடைய புரிதலற்றச் செயல்பாட்டுக்கும், பெருந்தவறுக்கும் முழுமையாக வருந்தித் திருத்திக் கொள்ள வாய்ப்புக் கோரும் தம்பி அனோஜனைத் தண்டிப்பது என்பது ஏற்புடையதல்ல! அதுவும் உச்சபட்ச தண்டனையாக மரணத்தண்டனை விதித்திருப்பது துளியும் நியாயமில்லை. சிறுபிள்ளைத்தனமாக தம்பி அனோஜன், சமூக வலைத்தளத்தில் மதம் சார்ந்து தவறாக எழுதியிருந்தாலும் தன்னுடைய கருத்தின் விளைவை உணர்ந்து, பதிவுகளை நீக்கி, சவூதி அரேபிய அரசிடமும், இசுலாமிய உறவுகளிடமும் மனம்திறந்து மன்னிப்புக் கோரியபோதே அச்சிக்கல் முற்றுப்பெற்றுவிட்டதாக ஆகிவிடுகிறது. அப்படியிருக்க, அவருக்கு மரணத்தண்டனை அளிப்பது என்பது எவராலும் ஏற்க முடியாதது. மனித உரிமை குறித்துப் பெரிதும் விவாதிக்கப்பட்டுப் பேசப்படும் இருபத்தோறாம் நூற்றாண்டில் வாழும் தற்காலச்சூழலில் இணையதளத்தில் எழுதிய அவதூறானக்கருத்துக்கு மரணத்தைத் தண்டனையாக விதிப்பது என்பது மிக மோசமான முன்னுதாரணமாகும். அன்பையும், இரக்கத்தையும், கருணையையும், பரிவையும் போதிக்கும் மகத்துவம் மிகுந்த மனிதநேய மார்க்கமான இசுலாத்தை அரச மதமாக ஏற்றிருக்கும், மக்களை நன்னெறிப்படுத்தி வழிகாட்டிய போற்றுதற்குரிய இறைதூதர் நபி பெருமானார் பிறந்த பெருமைமிக்க சவுதி நாடு இத்தகையத் தவறை செய்து, வரலாற்றுப்பிழையை நிகழ்த்திவிடக்கூடாது. ஒரு தவறுக்கு அதனைவிடப் பெருந்தவறு என்பது ஒருபோதும் நீதியாகாது என்பதை சவுதி நாட்டின் ஆட்சியாளர் பெருந்தகைகள் உணர வேண்டும். ‘நீங்கள் பூமியில் உள்ளவர்கள் மீது கருணை காட்டுங்கள். வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான்’ எனவும், ‘பிறரை மன்னிப்பதன் மூலம் நம்முடைய பாவங்களுக்கு இறைவனின் மன்னிப்பைப் பெற முடியும்’ என்று போதித்த போற்றுதற்குரிய பெருமகனார் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள், தமது இறுதிப் பேருரையில், “தனது நாவாலும், கைகளாலும் சக மனிதர்களுக்குத் தீமை விளைவிக்காதவரே மனிதர்களில் சிறந்தவர்!” என்கிறார். மேலும், மன்னிப்பை இறைவனின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாகவும், மனிதன் தன்னுள் வளர்த்துக் கொள்ள வேண்டிய குணாதிசயமெனவும் உலகுக்கு உரைக்கிறார். நபி பெருமானார் காட்டிய அத்தகைய உயர்ந்த அன்பு வழி நின்று, அந்த மன்னிப்பை தம்பி அனோஜனுக்கு சவுதி நாட்டின் அரசு வழங்க வேண்டும் என்பதுதான் உலகெங்கும் வேர்பரப்பி வாழும் தமிழ்த்தேசிய இனத்தின் எதிர்பார்ப்பும், கனிவானக் கோரிக்கையுமாகும். ஆகவே, உலகம் தழுவி வாழும் மானுடப்பற்றாளர்களும், சனநாயகவாதிகளும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தம்பி அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இம்மரணத்தண்டனைக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும், தம்பி சிவராசா அனோஜனை மரணத் தண்டனையிலிருந்து விடுவிக்க உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் சவூதி அரசோடு பேசி, தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 13, 2026
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam