இரண்டு நாட்களில் 2ஆவது தாக்குதல்! சவூதி விமான நிலையத்தில் தீப்பரவல்
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது தொடர்ந்து இரண்டாவது நாளாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று(11) நடத்தப்பட்ட தாக்குதலில் விமான நிலையத்தின் பயணிகள் மண்டபம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சவூதி இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பயணிகளுக்கு எச்சரிக்கை
இந்தச் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முந்தைய நாளில், இதே விமான நிலையம் மீதான தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 308 பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Another Middle East f**k up by trump now playing out. Airports in the Saudi Arabian capital Riyadh attacked by the iranian & russian back Houthis. 12 killed, 300 injured. https://t.co/CyI8C3WU6S
— FarleyFella (@Farleymarley16) October 11, 2026
இந்த வாரத்தின் தொடக்கத்திலும் இதேபோன்ற தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.
இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ள யேமனின் ஹூதி அமைப்பு, சவூதி அரேபிய விமான நிலையங்கள் மற்றும் வான்வெளியைப் பயன்படுத்த வேண்டாம் என விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி ரியாத் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு பதிலடி
மேலும், கிழக்கு சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தம்மாம் விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹூதி அமைப்பின் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் உள்பகுதிகளில் தாக்குதல்களைத் தொடர்ந்து தீவிரப்படுத்தப் போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனினும், மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யேமனில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு சவூதி அரேபியா ஆதரவளிப்பதற்கும், யேமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கும் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.
சவூதி விமான நிலையத்தில் அதிரடித் தாக்குதல்! 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து - இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து..