சவூதி விமான நிலையத்தில் அதிரடித் தாக்குதல்! 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து - இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து..
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீதான தாக்குதல் தொடர்பான செய்திகள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த தாக்குதலைத் தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்தால், இலங்கையின் எரிபொருள் இறக்குமதி, விமானப் போக்குவரத்து மற்றும் அங்கு பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு ஆகியவை பாதிக்கப்படக்கூடும்.
குறிப்பாக, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால் இலங்கையின் இறக்குமதிச் செலவுகளும் அதிகரிக்கலாம்.
எனவே, மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை இலங்கைக்கும் பொருளாதார ரீதியான சவால்களை ஏற்படுத்துமா என்பது கவனிக்க வேண்டிய விடயமாக உள்ளது.
மேலதிக தகவல்களை விரிவாக எடுத்துவருகின்றது லங்காசிறியின் கழுகுபார்வை நிகழ்ச்சி..
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri