வரியை குறைக்குமாறு கோரி சத்தியக்காடு சந்தை வியாபாரிகள் பணிப்புறக்கணிப்பு (Photos)
வலி.மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் தாம் விற்பனை செய்யும் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்று(04.01.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு விடப்பட்டதோடு ஏலத்தில் எடுக்கும் குத்தகைதாரருக்கு வியாபாரிகள் 4 வீத வரி செலுத்த வேண்டும் என்ற விடயம் ஏற்கனவே அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
வரி பிரச்சினை
அந்தவகையில் பிரதேச சபையும் சந்தையை குத்தகைதாரருக்கு வழங்கியதையடுத்து குறித்த வரி பிரச்சினை ஏற்பட்டதனால் குத்தகைதாரர், வலி.மேற்கு பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் குறித்த பகுதிக்கு சென்றனர்.
அவர்கள் அங்கு இருந்த வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு கடந்த வருடம் குறித்த குத்தகைதாரர் மனிதாபிமான ரீதியில் ஒரு மூடை மரக்கறிக்கு 60 ரூபா வரி வாங்கியுள்ளார்.
இந்த ஆண்டு விலைகள் அதிகரிப்பு காரணமாக மரக்கிக்கறிகளுக்கு கிலோவுக்கு மூன்று ரூபாவும், வெங்காயத்துக்கு கிலோவுக்கு ஒரு ரூபாவும், உருளைக்கிழங்குக்குக்கு கிலோவுக்கு இரண்டு ரூபாவும் வரியாக கோரியுள்ளார்.அல்லது அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டும் ரூபா வரியாக கோரியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவுகள்: ஜனாதிபதி நடவடிக்கை
இருதரப்பு இணக்கப்பாடு
ஆனால் அந்த வரிப்பணத்தை தங்களால் செலுத்த முடியாது என்றும் ஒரு மூடை மரக்கறிக்கு 80 ரூபா வரியாக தருவதாகவும் அல்லது வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கு கிலோவுக்கு ஒரு ரூபா வரியாக தருவதாகவும் ஏனைய அனைத்து மரக்கறிகளுக்கும் கிலோவுக்கு இரண்டு ரூபா படி வழங்குவதாகவும் வியாபாரிகள் கூறினர்.
இறுதியில் இரண்டு தரப்பினரும் அனைத்து மரக்கறிகளுக்கும் இரண்டு ரூபா வரி செலுத்துவதாக தெரிவித்து இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பதினாறாவது மே பதினெட்டு 4 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
