கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் தேங்காய்! சதொச நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு
லங்கா சதொச(Lanaka Sathosa) விற்பனை நிலையங்களில் இன்று(6) நாடு அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றை கட்டுப்பாட்டு விலையில் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என சதொசவின் தலைவர் சமித்த பெரேரா(Chamitha perera) தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் ஒரு கிலோ கிராம் 220 ரூபா என்ற அடிப்படையில் 5 கிலோ கிராம் அரிசியையும், ஒரு தேங்காயின் விலை130 ரூபா என்ற அடிப்படையில் மூன்று தேங்காய்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
அரிசி - தேங்காய் விற்பனை
லங்கா சதொச ஊடாக அரிசி மற்றும் தேங்காய் உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டில் தேங்காய் மற்றும், அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri