பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதோச நிறுவனம் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
அதன்படி, 1 கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 277 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1 கிலோகிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 279 ரூபா என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை...
அதேவேளை, 1 கிலோகிராம் கோதுமை மா 2 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 162 ரூபாவாக உள்ளது.
425 கிராம் டின் மீன் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.490 எனவும் 1 கிலோ உருளைக்கிழங்கு 13 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 185 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அது மாத்திரமன்றி, 1 கிலோ வெள்ளை பட்டாணி 45 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 750 ரூபா என புதிய விலை குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 1 கிலோகிராம் கல்லுப்பு 25 ஆல் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 160 ரூபாவாகவும்,1 கிலோகிராம் வெள்ளை உப்பு 20 ஆல் குறைக்கப்பட்டு புதிய விலை 575 ரூபா என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
