அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
குறைக்கப்பட்டுள்ள விலை
இதன்படி, இதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்தின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலையாக 1,400 ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் நிறையுடைய லங்கா சதொச பால்மாவின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 910 ரூபாவாகும்.
கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 260 ரூபாவாகும்.

அத்துடன், வெள்ளை பச்சை அரிசி கிலோ ஒன்று 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 200 ரூபாவாகும்.
கீரி சம்பா அரிசி கிலோ ஒன்று 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 258 ரூபாவாகும் என சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri