நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் குறித்து வெளியான முக்கிய தகவல்
நாடாளுமன்றை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.
22ம் திருத்தச் சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நிச்சயமற்ற நிலை
நாடாளுமன்றில் இந்த சட்ட மூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றுக்கொள்வதில் ஜனாதிபதி சவால்களை எதிர்நோக்குவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிச்சயமற்ற நிலையை கருத்திற் கொண்டு இவ்வாறு நாடாளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த முயற்சி குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்
இதன்படி தற்போதைய அரசியல் வேறும் திசை நோக்கி பயணிக்கக் கூடிய சாத்தியம் உண்டு என காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 22ம் திருத்தச் சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்துமாறு நீதி அமைச்சர், அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் குறித்த நிச்சயமற்ற நிலையை தவிர்க்கும் நோக்கில் இந்த அறிவுறுத்தலை அமைச்சர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri