இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ம.சசிகுமார் பதவியேற்பு
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ம.சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக மட்டக்களப்பு களுவாச்சிக் குடிமைப் சேர்ந்த சி. சசிகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நிதிச் செயலாளராக வடமராட்சியைச் சேர்ந்த கி. இந்திரனும் தெரிவு செய்யப்பட்டதோடு, துணைத்தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த இரா.சச்சிதானந்தம், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. அன்ரன் சேவியர், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த சசிகலா ஜெயராஜன், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த அமலராஜ் புனிதசீலி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னைநாள் பதில் பொதுச் செயலாளர்
கல்வி கலாசார செயலாளராக தென்மராட்சி வலய நா. கேதீஸ்வரனும் பத்திரிகைச் செயலாளராக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த தெ. சுதர்சனும், பிரசாரப் செயலாளராக மலையகத்தைச் சேர்ந்த அ. பாலசிங்கமும் தெரிவு செய்யப்பட்டு சபை ஏகமனதாக ஏற்கொண்டது.
தொடர்ந்து முன்னைநாள் பதில் பொதுச் செயலாளரும் விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்ற செ. சிவபாலசுந்தரும் கௌரவிக்கப்பட்டனர்.





