சமூக ஊடக விளம்பரத்திற்காக பிள்ளைகளின் தனியுரிமையை சீரழிக்கும் உரிமை பெற்றோருக்கு இல்லை: அமைச்சர் எச்சரிக்கை
தங்களது சுய பிரபலம் அல்லது நிதி ஆதாயத்திற்காக சிறுவர்களை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்தி, அவர்களின் தனியுரிமையைப் பாதிக்கும் உரிமை பெற்றோருக்குக் கிடையாது என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பிள்ளைகள் சமூக ஊடக பிரபலங்களாக மாற வேண்டுமா என்பதைப் பெற்றோர் தீர்மானிக்க முடியாது; அவர்கள் வளர்ந்து, முதிர்ச்சியடைந்த பின்னரே இத்தகைய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
கவலை வெளியிட்ட அமைச்சர்
விளம்பரம் மற்றும் வருமானத்திற்காக தமது பிள்ளைகளை ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, ஆபாச வார்த்தைகளைப் பேச வைப்பது மற்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கங்களில் ஈடுபடுத்துவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவது குறித்து அமைச்சர் கவலை வெளியிட்டார்.

பெற்றோரின் பொறுப்பற்ற சமூக ஊடகப் பயன்பாட்டினால் ஆபத்துக்குள்ளாகும் பிள்ளைகள் 'பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களாக' வகைப்படுத்தப்படுவர்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய சட்டப்பூர்வ பாதுகாப்புப் பொறுப்புமுறை செயல்படுத்தப்படலாம்.
இணையப் பிரபலம் மற்றும் நிதி நன்மைகளை விடக் பிள்ளைகளின் பாதுகாப்பு, தனியுரிமை மற்றும் நலனுக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri