கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் சரவணபவன் நியமனம் (photo)
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சரவணபவன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவர் மீண்டும் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த ஆரம்ப விசாரணைகள் இதுவரை நிறைவுபெறாத நிலையில் நேற்று (08.12.2022) வைத்தியர் சரவணபவன் காதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் மூலம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீது குற்றம் காணப்பட்டதாக வடக்கு சுகாதார செயலாளர் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எழுத்து மூலமாக அறிவித்தல்
கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் என மத்திய சுகாதார அமைச்சுக்கு மாகாண உயரதிகாரிகள் எழுத்து மூலமாக அறிவித்ததை அடுத்து இந்த மீள் நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிளிநொச்சி வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் ஆரம்ப புலனாய்வு மேற்கொள்வதற்காக கிளிநொச்சி மாவட்டச் செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் வி.கலைச்செல்வனை தலைவராாவும், கிளிநொச்சி சமூர்த்தி திணைக்களப் பணிப்பாளர் த.ஆரணி மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் ச.பிரசாத் ஆகிய இருவரையும் உறுப்பினராகவும் கொண்ட மூவரடங்கிய விசாரணை குழு தமது விசாரணை அறிக்கையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர், அதன் முன்னாள் கணக்காளர், மற்றும் மூன்று உத்தியோகத்தர்களும் மீதும் குற்றம் புரிந்துள்ளதனை இனம் கண்டுள்ளதாக தமது அறிக்கையினை சமர்பித்திருந்தனர்.
விசாரணைகள்

கணக்காளர் ஏற்கனவே இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் ஏனைய உத்தியோகத்தர்களில் இருவர் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பெற்று சென்றுவிட்ட நிலையில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் விசாரணைகள் நிறைவு பெறும் தற்காலி இணைப்பு வழங்கப்பட்டிருந்து.
தற்போது
குறித்த தற்காலிக இணைப்பு இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் அவர்
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan