தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்! பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் சரத் வீரசேகர
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். இல்லையேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மிரட்டல் விடுத்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸாரிடம் ஏற்பட்டுள்ள மோதல்
நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி எதனையும் சாதிக்கலாம் என்று கஜேந்திரகுமார், சாணக்கியன் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றார்கள். இது அவர்களின் அறியாத்தனம். இதற்காக அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்த தமிழ் மக்கள் வெட்கித்தலைகுனிய வேண்டும்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது பொலிஸாரிடம் சண்டித்தனம் காட்டும் அளவுக்கு துணிவு வந்துள்ளது. அவர்கள் அனைத்து விடயங்களுக்கும் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும். வெறுமனே வாய்ச்சவிடாலை விடுத்து அமைதியாக இருக்க வேண்டும்.இல்லையெனில் அவர்கள் கைது செய்யப்பட்டு பிணை வழங்காமல் சிறையில் தான் தொடர்ந்து அடைத்து வைக்கப்படுவார்கள்.
எனவே முதலில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டம், ஒழுங்கு தொடர்பில் நன்றாகத் தெளிவடைந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வெறிபிடித்த நபரிடமிருந்து பலரை வீரத்துடன் காப்பாற்றிய பிரித்தானியர்: சுயநினைவு திரும்பியதும் கூறிய வார்த்தை News Lankasri