தமிழ் மக்களை சித்திரவதை செய்யவில்லை! நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறும் சரத் வீரசேகர
அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இராணுவ வீரர்களின் உயிர்த்தியாகம்
அவர் மேலும் தெரிவிக்கையில், பல்லாயிரம் மக்களின் உயிர்களை பறிகொடுத்து, சொத்துகளை இழந்து முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டு யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்து 16 வருடங்கள் நிறைவடைகின்றன. எமது இராணுவ வீரர்களும் உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள்.
14000 வரையான இராணுவத்தினர் அங்கவீனமுற்றுள்ளார்கள். எனவே, இது தமிழ் மக்களுடனான போராட்டம் அல்ல. நாட்டைப் பிளவுபடுத்துவதற்காக செயற்பட்ட விடுதலைப் புலிகளுடனேயே நாங்கள் போராடினோம். அதேபோன்று தேசத்தின் மீது நேயமிக்க மக்கள் இருக்கும் வரை நாட்டைப் பிளவுபடுத்த இடமளிக்க மாட்டார்கள்.
புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக தெரிவித்தே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினர் ஆட்சிக்கு வந்தார்கள். தற்போதுள்ள அரசியலமைப்பில் பிரதானமாக இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒரு விடயம் இந்த நாடு சமயமில்லாத நாடாக வேண்டும். அதேபோன்று இந்த நாடு பெடரல் நாடாக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு எமது நாடு பெடரல் நாடாகினால் இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிப்பதில் எந்தப் பலனும் இல்லை. இந்த நாடு ஐக்கியமாக இருந்தால் மாத்திரமே இராணுவத்தினரின் அர்ப்பணிப்புக்கு மதிப்பு கிடைக்கும். பட்டலந்த வதைமுகாமில் சிங்கள மக்களையே இவ்வாறு சித்திரவதைச் செய்திருப்பார்கள் என்றால் யுத்தக் காலத்தில் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியிருப்பார்கள் என்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.
குற்றச்சாட்டிற்கான ஒத்துழைப்பு
இது இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைக்கப்படும் தேசத்துரோக யுத்தக் குற்றங்கள் மீதான வெளி பொறிமுறையை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் பேசும் ஒவ்வொரு உரையும் ஹன்சாட்டில் வெளியிடப்படும். அவ்வாறு ஹன்சாட்டிலிடப்பட்டதன் பின்னர் நாங்கள் யுத்தக் குற்றம் செய்துள்ளோமென்ற குற்றச்சாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகிவிடும்.
இதுவே மிகப் பெரிய காட்டிக்கொடுப்பாகும். எனவே, யுத்தம் இடம்பெற்ற காலத்தில் சபை முதல்வர் எங்கிருந்தாரென்பது தெரியவில்லை. அந்தக் காலப்பகுதியில் பிமல் ரத்நாயக்க இங்கிருந்திருக்காவிட்டால் 22 இலட்சத்து 95 ஆயிரம் தமிழ் மக்களைப் பாதுகாத்துக் கொண்டே இந்த யுத்தத்தை வெற்றிகொண்டோம் என்பதை நினைவுபடுத்திக்கொள்ள விரும்புகிறோம்.
யுத்த காலத்தில் எந்தவொரு யுத்தக் குற்றமும் இடம்பெறவில்லை என்பதுடன், அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இவர் இதற்கு முன்னரும் இலங்கை சிங்கள பெளத்த நாடு இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான நிலைப்பாடுகளைக் கொண்ட பிமல் தற்போது நாட்டைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
