மன நோயாளிகள் போன்று கருத்துக்களை கூறும் சரத் வீரசேகர மற்றும் சவேந்திர சில்வா! துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு (Video)
தமிழர்களின் பூர்வீக பொருளாதார சின்னங்கள் தொடர்பில் சரத் வீரசேகர மற்றும் சவேந்திர சில்வா ஆகியோர் கூறுகின்ற கருத்துக்கள் மன நோயாளிகள் கூறுகின்ற கருத்துக்கள் போன்றவை என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (12.08.2023) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், வட மாகாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மாணவர் மத்தியிலும் சென்றுள்ளது.
மோசமான நிலைமை
ஆயிரக்கணக்கான படையினரும், பொலிஸாரும் பணியில் இருக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் பதிவாகுவது மிகவும் மோசமான நிலைமை ஆகும். இதனை கட்டுப்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணியின் போது மனித எச்சங்கள் பல காணப்பட்டன.
காணாமல் போனவரின் உறவினர்கள் இவ்விடயம் தொடர்பாக அவதானத்துடன் போராடி வருகின்றனர். இவர்களுக்கு நீதியான ஒரு தீர்வு கிடைக்க சரியான முறையில் அகழ்வு பணி மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
