போராட்டக்காரர்கள் மீது பழி சுமத்துவதை ரணில் நிறுத்த வேண்டும்- சரத் பொன்சேகா வலியுறுத்து
மக்கள் எழுச்சியின் பலத்தின் முன்பாக ஆயுத பலம் தோற்றுப்போகும் இதனால் தான் ராஜபக்சர்கள் தப்பியோட நேர்ந்தது. இதனை ஜனாதிபதி உணர்ந்துகொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவு
“காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது இராணுவத்தினர் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.
அதைவிடுத்து அவர், போராட்டக்காரர்கள் மீது பழிசுமத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை உடன் நிறுத்த வேண்டும்.
மக்களின் பலம்
மக்கள் பலத்தை ஆயுத பலத்தால் ஒருபோதும் அடக்கவே முடியாது. இந்த மக்கள் பலம்தான் ராஜபக்சர்களை அதியுயர் பதவிகளிலிருந்து தூக்கியெறிந்தது. இதை ரணில் விக்ரமசிங்க புரிந்துகொள்ள வேண்டும்.
இதற்கமைய ரணிலுக்கு எதிராகக் காலிமுகத்திடலில் போராடும் மக்களுக்கு எனது முழுமையான ஆதரவு தொடர்ந்தும் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
தன் வீட்டை எரித்தமைக்கான பதிலடியே காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: க.வி.விக்னேஸ்வரன் கண்டணம் |