தன் வீட்டை எரித்தமைக்கான பதிலடியே காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: க.வி.விக்னேஸ்வரன் கண்டணம்

Galle Face Protest Ranil Wickremesinghe C. V. Vigneswaran
By Theepan Jul 25, 2022 12:02 AM GMT
Report

ரணில் விக்ரமசிங்க புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்று காலி முகத்திடலில் போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றமையை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இத் தாக்குதல் குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

“அவர்கள் தாமாகவே வெளியேற ஆயத்தப்படுத்துகையில் இது நடந்தமை தன் வீட்டை எரித்தமைக்கான பதிலடியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களில் இருந்து வெளியேறுவதற்காக மென்வலு முயற்சிகளை பிரயோகிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டமை ஏமாற்றத்தையும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது.

முன்னைய ஜனாதிபதி இருந்த போது பிரதமராக பதவி ஏற்ற பின்னர் போராட்டம் காலி முகத்திடலில் நடைபெறுவதை அனுமதிக்கும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் காலிமுகத்திடல் போராட்டம் தொடரலாம் என்றும் ரணில் அறிக்கை விட்டிருந்தார்.

அத்துடன் முன்னைய அரசாங்கம் இருந்த போது, மே 9 ஆம் திகதி காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்திய போது அதனைக் கண்டித்திருந்த ரணில் விக்ரமசிங்க பிரதமரும், ஜனாதிபதியும் பதவி விலக வேணடும் என்று கோரியிருந்தார்.

தன் வீட்டை எரித்தமைக்கான பதிலடியே காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: க.வி.விக்னேஸ்வரன் கண்டணம் | Galle Face Protest Attack Vigneswaran

ஆனால்,ரணில் விக்ரமசிங்க தற்போது ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் பொது மக்களின் போராட்டத்தை நசுக்குவதற்கு மேற்கொண்ட இந்த வன்முறை பிரயோகம் கவலைக்கிடமானது.

இன்று (23.07.2022) முன்னர் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்;ட 83 ஜூலை வன் செயல்களின் 39வது நினைவு தினமாகும். குறித்த வன்செயல்களின் தாக்கம் இன்றும் எம் மக்கள் மனதில் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டே தான் உள்ளது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்கவுக்கு நான் வாக்களித்ததன் காரணம் அவர் பொது மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தகுந்த தீர்வொன்றினை கொண்டு வந்து பொதுமக்களைப் பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் தானே அன்றி, அடக்குமுறைகள் ஊடாக பொதுமக்களின் போராட்டங்களை நசுக்க வேண்டும் என்பதற்காக அல்ல.

தன் வீட்டை எரித்தமைக்கான பதிலடியே காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: க.வி.விக்னேஸ்வரன் கண்டணம் | Galle Face Protest Attack Vigneswaran

ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு புதிய ஜனாதிபதியும் அரசாங்கமும் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் போராட்டக்காரர்கள் அரச அலுவலகங்களில் இருந்து வெளியேறி அரசாங்கம் சுமூகமாக செயற்படுவதற்கு இடமளிக்கும் வகையில் தம்மைத் தயார் செய்து கொண்டிருந்த போது பொறுமை இழந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த வன்முறை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

வன்முறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் அனைவரும் கேட்பது ஜனாதிபதியின் காதில் விழும் என்று எதிர்பார்க்கின்றேன்”என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் ஒரு தாக்குதல் இடம்பெறக் கூடும் என காலி முகத்திடல் போராட்டகாரர்கள் அச்சம் 


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US