கோட்டாபயவாக மாறிய சரத் பொன்சேகா (Video)
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. கோட்டாபய ராஜபக்சவான விடயம் நேற்று பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பாக இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. உள்ளிட்ட சிலர் தம்மால் வாக்களிக்க முடியவில்லை என கூறினார்.
இதனையடுத்து அவர்களை ஒவ்வொருவராக பெயர் குறிப்பிட்டு அழைத்து ஆதரவா இல்லையா என சபாநாயகர் கேட்டார்.
இந்த நிலையிலேயே பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேகா எம்.பியைப் பார்த்து சபாநாயகர் “கோட்டாபய ராஜபக்ச” எனக்கூறிவிட்டு உடனடியாக சிரித்து சமாளித்து சரத் பொன்சேகா என அழைத்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam