தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது: சரத் பொன்சேகா - செய்திகளின் தொகுப்பு
தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது" என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு வடக்கு, கிழக்கு நிலைவரம் எவ்வாறு உள்ளது, ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி. கூறியுள்ளாரே என ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "விக்னேஸ்வரன் என்பவர் அடிப்படைவாத நோக்கில் அரசியலை முன்னெடுப்பவர்.
அரசியலில் அவர் முதிர்ச்சியடைந்த நபரும் கிடையாது. வடக்கு, கிழக்கில் முதிர்ச்சியடைந்த அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்கள் இவ்வாறு முட்டாள்தனமாகக் கருத்துகளை முன்வைக்கமாட்டார்கள்’’ என்றார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு…
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |