புதிய கட்சியை உருவாக்கியுள்ள சரத் பொன்சேகா! வருட இறுதி முதல் அரசியல் களம் காணத் தயார் என அறிவிப்பு

Sarath Fonseka
By Rakesh May 28, 2026 11:42 AM GMT
Report

தான் புதியதொரு கட்சியை உருவாக்கியுள்ளதாகவும், இவ்வருட இறுதி முதல் அக்கட்சியின் ஊடான அரசியல் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின்போதே அவர் இந்தத் தகவலைப் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

பதறும் மத்திய கிழக்கு..! ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா பயங்கர தாக்குதல்

பதறும் மத்திய கிழக்கு..! ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா பயங்கர தாக்குதல்

 புதிய கட்சி

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புதிய அரசியல் சக்தியொன்றின் தேவை நாட்டுக்குக் காணப்படுகின்றது. எமது புதிய கட்சியில் எவ்வாறான தகுதியுடைய நபர்களை இணைக்க வேண்டும் என நாம் சில கடுமையான நெறிமுறைகளை வகுத்திருந்தோம்.

புதிய கட்சியை உருவாக்கியுள்ள சரத் பொன்சேகா! வருட இறுதி முதல் அரசியல் களம் காணத் தயார் என அறிவிப்பு | Sarath Fonseka Start New Political Party

அந்த நிர்ணயங்களுக்கமைய, தற்போது 75 சதவீதமான ஆரம்பக்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்க வேண்டிய தகுதியும், தூய்மையான பின்னணியும் கொண்ட நபர்களைத் தேடும் பணிகள் தற்போது எம்மால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கட்சியின் ஆரம்பக் காலகட்டத்தில் நானே இந்த புதிய கட்சிக்குத் தலைமை வகித்து வழிநடத்துவேன்.

மாற்றுத் தலைமைக்கான வழிகள்

அதன் பின்னர், கட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய தகுதியான சிறந்த இளைய தலைமுறையினருக்குத் தலைமைத்துவ இடம் தாராளமாக அளிக்கப்படும்.

நான் நூறு வருடங்களுக்குத் தொடர்ந்து அரசியலில் ஈடுபட முடியாது அல்லவா? அதனால் மாற்றுத் தலைமைக்கான வழிகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

புதிய கட்சியை உருவாக்கியுள்ள சரத் பொன்சேகா! வருட இறுதி முதல் அரசியல் களம் காணத் தயார் என அறிவிப்பு | Sarath Fonseka Start New Political Party

தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் வலுவாகப் பயணித்தால், அதற்கு எமது தரப்பிலிருந்து சாதகமான ஆதரவு வழங்கப்படும்.

ஆனாலும், ஜனநாயக நாடொன்றில் அரசைக் கண்காணிப்பதற்கும், தவறுகளைத் தட்டிக்கேட்பதற்கும் பலமான சிறந்த மாற்றுச் சக்தியொன்று எப்போதும் களத்தில் இருக்க வேண்டும். அந்தப் பொறுப்பை எமது புதிய கட்சி ஏற்கும்.

எனவே, தற்போது நாடாளுமன்றத்தில் எதிரணியில் இருந்து கொண்டு மக்களை ஏமாற்றி வரும் பழைய அரசியல் கட்சிகளை மக்கள் முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்து! அவசரமாக சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய்

ராகுல் காந்தியுடனான சந்திப்பு ரத்து! அவசரமாக சென்னை புறப்பட்ட தமிழக முதலமைச்சர் விஜய்

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US