பீல்ட் மார்சலை கட்சியில் இருந்து நீக்குங்கள் - கம்பஹா அமைப்பாளர்கள் கோரிக்கை
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை (Sarath Fonseka) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியில் இருந்து நீக்குமாறு, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) கம்பஹா மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின் உயர்தரப்பிடம் முறையான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
பொன்சேகாவை கட்சியில் இருந்து நீக்குமாறு அனைத்து கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களும் கட்சியின் பொதுச் செயலாளரிடம் ஏகமனதாக கோரிக்கை விடுத்துள்ளதாக, கட்சியின் வத்தளை அமைப்பாளர் நியோமல் பெரேரா ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதித்துறையை தாம் மதிக்கிறோம்.
அமைப்பாளர்கள் மகிழ்ச்சி
எனினும், அவர் இனியும் கட்சியில் இருக்க அனுமதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம் என்று பெரேரா கூறியுள்ளார்.
இந்தநிலையில், பொன்சேகா நீக்கப்படவுள்ளமை தொடர்பில் கம்பஹா மாவட்ட அமைப்பாளர்கள் மகிழ்ச்சியடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
