கட்டுப்பணம் செலுத்தினார் சரத் பொன்சேகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், சட்டத்தரணி சமீர கலே ஆரச்சியினால் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 25 அன்று, பொன்சேகா தான் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
பலர் கோரிக்கை
தன்னை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்,, மேலும் இலங்கை மக்களின் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் இராணுவத் தளபதி, "இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு" தன்னுடன் இணையுமாறு ஒவ்வொரு இலங்கையரையும் அழைப்பு விடுத்திருந்தார்.
இலங்கை இராணுவத்தின் பதினெட்டாவது தளபதியாக இருந்த அவர் அதன் பின்னர், ஜெனரல் அந்தஸ்துடன் ஓய்வு பெற்ற பிற்றார்.
2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டு பொது எதிரணி வேட்பாளராக அரசியலில் பிரவேசித்தார்.
ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர் பொதுத் தேர்தலில் நாாடளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஃபீல்ட் மார்ஷல் பதவிக்கு பதவி உயர்வு பெற்ற பொன்சேகா, அந்த பதவியை பெற்ற முதல் இலங்கை இராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார்.
இது வரையில், 16 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
இதில் 7 சுயேச்சை வேட்பாளர்களின் பெயர்கள் வாக்களும், 8 வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், ஏனைய அரசியல் கட்சிகளின் ஒரு வேட்பாளரும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
