கம்மன்பில கட்சியின் செயலாளரை அறியாத முட்டாள் - சரத் பொன்சேகா
அமைச்சர் உதய கம்மன்பில தனது வேட்புமனு பத்திரத்தில் கையெழுத்திட்ட கட்சியின் செயலாளரை அறியாத முட்டாள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரான அவர் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
சாகர காரியவசம் என்ற நபரை தான் அறிந்து கொண்டது அண்மையில் எனவும் அப்படியானவரை தனக்கு தெரியாது எனவும் உதய கம்மன்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கூறியிருந்தார்.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே பொன்சேகா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் உதய கம்மன்பிலவின் வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்கள், தான் அறியாதவர் எனக் கூறும் சாகர காரிவசம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கம்மன்பில மற்றும் காரியவசம் ஆகியோர் இரண்டு அணிகள் கிடையாது பொதுஜன பெரமுனவின் ஒரே அணியினர் எனவும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam