சரத் பொன்சேகா விரும்பினால் பொதுஜன பெரமுனவில் இணையலாம்: நாமல் ராஜபக்ச
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா விரும்பினால் பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்ள முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி விகாரைக்கு வழிபாடுகளுக்காக நேற்று (20) வருகை தந்திருந்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் 45 ஆண்டு காலமாக எதிரெதிர் அரசியல் முகாம்களில் செயற்பட்டவர்கள். ஆனால் நாங்கள் இன்று ரணில் விக்ரமசிங்கவையும் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
சரத் பொன்சேகாவின் விருப்பம்
சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்.

அந்த வகையில் அவர் பொதுஜன பெரமுணவில் இணைந்து கொள்ள விரும்பினால் எமது கதவுகள் என்றும் திறந்தே உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri