சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படுகிறது..!
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படலாம்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மசகு எண்ணெய் எடுத்து வரப்படுவது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இன்று (24) இரவு முதல் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டியேற்படும் என்று பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுத்திகரிப்பு தொட்டிகளின் பாதுகாப்பிற்காக மீதமுள்ள எரிபொருள் எண்ணைய்யை தொடர்ந்து பயன்படுத்துமாறு சுத்திகரிப்பு நிலையத்திற்கு நிர்வாகம் அறிவுறுத்தியதாக இலங்கை பெற்றோலியக்பொறியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் சன்ன பிரபாத் தெரிவித்துள்ளார்.
நான்கு நாட்களில் கப்பல் வருமா?
எனினும், அடுத்த நான்கு நாட்களுக்குள் ஒரு கப்பல் வரும் என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பாதுகாக்கப்பட்ட எரிபொருள் அளவு பயன்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
