சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமைக்கான காரணம் என்ன? (VIDEO)
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய களஞ்சியசாலையில் மசகு எண்ணெய் தீர்ந்தமையினால், இன்று முதல் எரிபொருள் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மசகு எண்ணெய்யை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில எடுக்காமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு முன்பாக பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், தமது களஞ்சியசாலையில் 12 முதல் 20 நாட்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோல் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபன மொத்த களஞ்சியசாலை நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.
தேவை ஏற்படும் பட்சத்தில், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை நாட்டிற்கு இறக்குமதி செய்து, விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மசகு எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட விலை மனுகோரலுக்கு, விநியோகஸ்தர்கள் முன்வராமையை அடுத்தே, சப்புகஸ்கந்தை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கான நிலைமை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 5 மணி நேரம் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
