இலங்கை இந்திய வம்சாவளி உறவை பலப்படுத்த நடவடிக்கை
உடப்புவா மக்களால் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான பல நூற்றாண்டுகளாக நிலைத்து வரும் மக்கள்-மக்கள் உறவின் ஒரு தனித்துவமான அம்சம் பிரதிபலிக்கப்படுகின்றது என உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 2026 மார்ச் 17 ஆம் திகதி புத்தளம் மாவட்டத்திற்கான தனது விஜயத்தின் போது உடப்புவா கிராமத்துக்கு சென்றார்.
தனித்துவமான மரபுகள்
இந்த தனித்துவமான கிராம மக்களின் தென் இந்தியாவின் ராமேஸ்வரத்தில் உள்ள அக்கமடம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளுக்கு சொந்தமானவை என அவர்கள் தெரிவித்தனர்.

உயர்ஸ்தானிகர் உடப்புவா ஸ்ரீ பார்த்தசாரதி ஆலயத்தில் வணக்கம் செலுத்தி, கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, அவர்களின் முன்னோர்கள் 17ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்து இப்பகுதியில் குடியேறியதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அவர்கள் தங்களது தனித்துவமான மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை இன்றளவும் பாதுகாத்து வருவதாகவும் கூறினர்.
இந்திய வம்சாவளி தமிழர்கள்
அவற்றில் ஸ்ரீ திரௌபதி அம்மன் வழிபாடு மற்றும் ஆண்டுதோறும் ஆலய வளாகத்தில் நடைபெறும் தீமிதிப்பு திருவிழா ஆகியவை அடங்கும். உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, உடப்புவா மக்களால் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான பல நூற்றாண்டுகளாக நிலைத்து வரும் மக்கள்-மக்கள் உறவின் ஒரு தனித்துவமான அம்சம் பிரதிபலிக்கப்படுகின்றது எனக் குறிப்பிட்டார்.

மேலும், புயல் ‘டிட்வா’க்கு பிந்தைய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அமெரிக்க டொலர் 450 மில்லியன் மதிப்பிலான உதவித் தொகையின் ஒரு பகுதியாக, இந்திய அரசு இலங்கை அரசுடன் இணைந்து புத்தளம் பகுதியில் இணைப்புகளை மேம்படுத்தவும், சுகாதார சேவைகளை வலுப்படுத்தவும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தியா இலங்கையின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களை உள்ளடக்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.


