சாந்தனை இலங்கை அழைத்து வர நடவடிக்கை: அமைச்சர் உறுதி
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
அவரின் தாய் மற்றும் சகோதரர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேற்று (30.01.2024) சந்தித்து கடுமையான சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ள சாந்தனை நாட்டிற்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானநந்தா குறித்த உறுதி மொழியை வழங்கி உள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி
இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சாந்தனை இலங்கை திரும்பி வருவதற்கு வெளிவிவகார அமைச்சினால் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.
சென்னையில் உள்ள தூதரகத்தின் துணைத் தூதரான வெங்கட்டுடன் பேசப்பட்டுள்ளதாகவும் அநேகமாக இரண்டு மூன்று நாட்களுக்குள் அந்த விடயம் சரிவரும் அத்தோடு இந்திய அதிகாரிகளால் சில ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன.
அந்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுமிடத்தில் அந்த விடயம் சாத்தியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
