வலி. மேற்கு பிரதேச சபையில் வாக்கினை தவறாக அளித்த சங்கு உறுப்பினர்!
வலி. மேற்கு பிரதேச சபையில் உறுப்பினர் ஒருவர் வாக்கினை தவறாக அளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தனும், தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாரும் போட்டியிட்டனர்.
கோரிக்கை
இந்தநிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமாருக்கு அளிக்கவேண்டிய வாக்கினை ச.ஜெயந்தனுக்கு அளித்துள்ளார்.
பின்னர் அந்த வாக்கினை மாற்றுமாறு அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்த நிலையில் வாக்கு பதிவு செய்யப்பட்டதால் அதனை மாற்றம் செய்ய முடியாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி பாபு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




