யாழ்ப்பாண இளம் கிரிக்கெட் வீரர்களின் திறமைக்கு ஊக்கமளித்த குமார சங்கக்கார
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார சங்கக்கார, தம்புள்ளை கனிஸ்ட அணியின் ரஞ்சித்குமார் நியூட்டன், கே. மாதுலன், வி. ஆகாஸ் மற்றும் ஏனைய வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கியுள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார். தம்புள்ளை பிரதேச இளைஞர் தெரிவு இணைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரஞ்சன் பரணவிதானவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
நியூட்டன் மற்றும் மாதுலன் ஆகியோர் இப்போது ஆசியக் கிண்ணத்தின் இலங்கையின் 19 வயதுக்குட்பட்டோரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். ஆகாஸ் பங்களாதேஸ் தொடருக்கான 17 வயதுக்குட்பட்ட அணியில் இணைந்துள்ளார்.
முதல் தடவை
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஞ்சித்குமார் நியூட்டன், சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வலது கை ஸ்லிங்கர் கே.மாதுலன் மற்றும் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியின் வலது கை சுழற்பந்து வீச்சாளர் வி.ஆகாஸ் ஆகியோர் இந்த முன்னேற்றங்களின் மூலம் சாதனை படைத்துள்ளனர்.
இலங்கையின் தேசிய இளைஞர் அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். சில வருடங்களுக்கு முன்னர் வியாஸ்காந்தும் தேசிய இளைஞர் அணிக்காக விளையாடிய பெருமையும் பெற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
