சங்கக்காரவிற்கு டப்ளின் விமான நிலையத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவம்
இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார டப்ளின் விமான நிலையத்தில் தாமும் தமது குடும்பத்திரும் எதிர்நோக்கிய கசப்பான அனுபவம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் அவர் இந்த விடயம் தொடர்பில் பதிவிட்டுள்ளார். தாமும் தமது குடும்பத்தினரும் விமான நிலைய பணியாளர் ஓருவரினால் இழிவாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டப்ளினின் ரயன் எயார் விமான நிலையத்தின் பணியாளர் ஒருவர் மிகவும் இழிவாக தம்மை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டப்ளினின் ரயன்எயார் விமான நிலையத்தில் தம்மைப் போன்ற ஏனைய பயணிகளும் கசப்பான அனுபவங்களை எதிர்நோக்கினார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விமான நிலைய பணியாளர்கள் தம்மையும் தமது குடும்பத்தினரையும் அச்சுறுத்தும் தொனியில் நடத்தியதாகவும் விரும்பத்தகாத வகையில் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் விமான நிலையத்தில் தமது குடும்பத்தினர் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைமை குறித்த தெளிவான விளக்கத்த அவர் எக்ஸ் தளத்தில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri