மணல் அகழ்வு பிரச்சினை! மக்களின் முறைப்பாட்டால் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த செல்வராசா கஜேந்திரன் (Video)
திருகோணமலை - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட மணல் அகழ்வு பிரச்சினையை பார்வையிட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயம் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேசத்திலுள்ள நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதால் அணைக்கட்டு உடைப்பெடுக்கும், இதனால் ஒன்பது கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம் என தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனாலும் குறித்த நாதனோடை பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்வதினால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவித்து ஒன்பது கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

மக்கள் கூறும் விடயம்
இதேநேரம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரதான நபர்களை இலக்கு வைத்து பொலிஸார் கைது செய்து வருவதுடன் இதுவரைக்கும் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
மணல் அகழ்வதற்கு செல்ல விடாமல் தடுத்ததாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்து வருவதாகவும், தமது உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் பொது மக்களாகிய தாம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்கு சென்றால் திருப்பி அனுப்புவதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனிடம் முறையிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வராஜா கஜேந்திரன் குறித்த பகுதிக்கு விஜயம் செய்துள்ளதுடன், ஈச்சிலம்பற்று பொலிஸ்
பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடும் போது பொது அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கும்
போது ஒரு சிலரை மாத்திரம் கைது செய்யாமல் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின்
கோரிக்கைகளை கேட்டறிந்து பொலிஸார் செயற்பட வேண்டுமெனவும் அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.


கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri