திருகோணமலையில் மணல் அகழ்வு! நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடி விஜயம்
திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாதன்ஓடையில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான கள நிலைமைகளை ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இன்று (25) காலை அப்பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அப்பகுதியைப் பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதி மக்களிடம் பிரச்சினைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்துள்ளனர்.
இதன்போது வெருகல் பகுதியிலுள்ள விவசாயச் சங்கங்கள், சமூக அமைப்புக்கள், வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது மணல் அகழ்வினால் வெருகல் பகுதியில் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri