சுவிஸர்லாந்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக இலங்கைத் தமிழர்
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் நீண்டகாலத்திற்கு பயனுள்ள நடவடிக்கையாக இருக்காது என இலங்கைத் தமிழர் சுவிஸர்லாந்தின் சர்வதேச விவகாரங்களுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி ரெமோ ரெஜினோல்ட் தெரிவித்துள்ளார்.
சுவிஸர்லாந்து தேசிய உதைப்பந்தாட்ட அணியின் பகிஷ்கரிப்பு நடவடிக்கை இது தொடர்பிலான மேலதிக அடையாளமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
புட்டின் ஆணுவாதங்களை கொண்டு தாக்குதல் நடத்துவது சாத்தியமில்லை. மாறாக உக்ரைனனுக்கு எதிரான போரை மேற்குலகம் எப்படி அணுகிறது என்பதை பொருத்து உலகின் கிழக்கு பிராந்தியத்தின் நடவடிக்கைகள் அமையும்.
ரஷ்ய ஜனாதிபதி புட்டின், சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் இணைந்த புதிய உலக அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார். எதிர்காலத்தில் ரொக்கட்டுகள் மற்றும் போர் தாங்கிகளை போரில் பயன்படுத்துவது குறைவாக இருக்கும் என்பதுடன் இணையத்தள சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும்.
உக்ரைனுக்கு எதிரான போரின் மூலம் ரஷ்யா எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை உலகின் கிழக்கிற்கு காண்பிக்க விரும்புகிறது. இதற்கும் மேல் கிழக்குலகம் தன்னுடன் இணைந்து இயங்க வேண்டும் என்பதை ரஷ்யா விரும்புகிறது.
உலகம் அதிகளவில் இணைய இணைப்பில் இருக்கின்றது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் இணைய வழியான தாக்குதல்கள் தொடரப்படலாம். போர் தளப்பாடங்களுடனான போர் விரைவில் முடிந்து விடும் என்று கருதுகிறேன்.
ஆனால், ஏனைய மட்டங்களில் அது தொடரும் என ரெமோ ரெஜினோல்ட் குறிப்பிட்டுள்ளார். புட்டின் புதிய உலக நாடுகளின் அணியை உருவாக்க முயற்சித்து வருகிறார்.
இந்த அணி உலகின் கிழக்கு நாடுகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். அதேவேளை புட்டின் ரஷ்யாவிடம் இருக்கும் அணுவாயுதங்களை பய்னபடுத்தக் கூடிய அச்சுறுத்தலை அதிகரிக்க செய்தார். அதேவேளை உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி சமூக ஊடகங்கள் வாயிலாக ஒரு போரை நடத்தி வருகிறார்.
இது ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கு அறிமுகம் இல்லாத புதிய உத்தியாக இருக்கின்றது. உக்ரைன் மீதான தாக்குதல் மூலம் புதிய உலக நாடுகளின் அமைப்பை உருவாக்க முடியுமா என்று புட்டின் பரீட்சித்து பார்த்து வருகிறார்.
அதேபோல் அமெரிக்காவுடனான ரஷ்யாவின் உறவை மதிப்பிடுவது கடினமானது. மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தூரநோக்கு பார்வையற்றவராக இருக்கின்றார்.
உலக நாடுகள் எந்த அணியில் இருக்க வேண்டும் என்ற செய்தியை ரஷ்யா உலகத்திற்கு வழங்க விரும்புகிறது. அணுவாயுத போரை எதிர்பார்க்கவில்லை என்றாலும் புட்டினின் பகுத்தறிவற்ற தன்மை காரணமாக நிகழும் சாத்தியமும் உள்ளது.
போலாந்து சுகாதார உட்கட்டமைப்பின் மீதான சைபர் தாக்குதல் நேட்டோ நாடுகள் மீதான தாக்குதலாக இருக்கலாம் என்ற கேள்வி எழுகிறது. அடையாளம் காண முடியாத சைபர் தாக்குதல்கள் மூலம் தம்மால் முடியும் என்பதை காண்பிக்க முயற்சிப்பார்கள்.
ரஷ்யா போலந்து நாட்டை தாக்கினால், நேட்டோ அமைப்பு யாப்பின் 5வது பிரிவின் கீழ் அதில் தலையிடும் என்பதுடன் முழு நேட்டோ நாடுகளும் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கலாம் எனவும் ரெஜினோல்ட் குறிப்பிட்டுள்ளார்.