முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஊழியர் மீது தாக்குதல்
மறைந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஊழியர் ஒருவர் மீது கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் கழிவுகளை அகற்றும் திட்டத்திற்கு பொறுப்பான நபர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திலிருந்து தன்னை வெளியேறும் படி சம்பந்தப்பட்ட கும்பல் தனது வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியமை பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது.
விசாரணைகள் ஆரம்பம்
இருப்பினும், இந்த கும்பல் தாக்குதல் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இதேவேளை, தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் பிரதேசத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
