உயிரிழப்பதற்கு முன்னர் நள்ளிரவில் சனத் நிஷாந்த பதிவு செய்த தகவல்
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு ஏற்பட்ட விபத்துக்கு சற்றுமுன்னர் தனது முகநூலில் காணொளி பதிவொன்றை இட்டுள்ளார்.
அதில் "வெளித் தோற்றத்தைப் பார்த்து ஒருபோதும் மனிதர்களைக் கணிப்பிட வேண்டாம். இன்று சமூகத்தில் பெரும்பாலானோர் இதனையே செய்கின்றனர்." - என அந்த காணொளி பதிவு அமைந்துள்ளது.
இன்று அதிகாலை 1.37 மணிக்கு தனது பேஸ்புக் கணக்கில் குறித்த பதிவை இட்டுள்ளார்.
2 மணியளவில் விபத்து
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்திருந்தது.
இதன்மூலம் அவர் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது இந்த பதிவை பேஸ்புக் தளத்தில் வெளியிட்டிருக்காலாம் என்பது தெரியவருகிறது.





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
