சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட சனத் நிஷாந்தவின் உடல் : வீதியின் இரு மருங்கிலும் காத்திருந்த மக்கள்
விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உடல் புத்தளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பொரளை ஜயர்தன மலர்சாலையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் புத்தளம் - ஆராச்சிக் கட்டுவவில் அநை்துள்ள அவரது வீட்டுக்கு இன்று மாலை கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இறுதிக் கிரியைகள்
இதன்போது, இராஜாங்க அமைச்சருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வீதியின் இரு மருங்கிலும் பொது மக்கள் திரண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சனத் நிஷாந்தவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை ஜயரத்ன மலர் சாலையில் வைக்கப்பட்டிருந்த சனத் நிஷாந்தவின் உடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் நேற்று இரவு சனத் நிஷாந்தவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிலையில், இன்று காலை முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள பவதாரணியின் உடல் : ஒன்று திரளும் திரைப் பிரபலங்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |