சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் : சபையில் அறிவிப்பு
விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் திட்டமிட்ட கொலையா? சாதாரண விபத்தினால் இந்த மரணம் இடம்பெற்றதா என்பதை விரைவாக ஆராய்ந்து குற்றவாளிகள் இருப்பின் அவர்களுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.
சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அந்த சந்தேகத்தின் காரணமாகவே அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்கிறார்.
சமூக ஊடகங்களிலும் இது தொடர்பில் விவாதம் இடம்பெற்று வருகின்றது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு விரைவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |