பிள்ளையான் வழக்கில் நீதிபதிகள் மாற்றம்! நாடாளுமன்றில் சாணக்கியன் வெளியிட்ட பல தகவல்கள் (Video)
அண்மையில் வெளிவந்துள்ள சில குரல் பதிவுகளை பார்க்கும் போது இலங்கையில் நீதித்துறை தொடர்பாக பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
சனல் 4 வெளிப்படுத்திய விடயங்கள் தொடர்பில் இன்று (07.09.2023) நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையான் என்று அழைக்கப்படும் ஒரு கொலையாளியை வெளியில் கொண்டு வருவதற்காக நீதிபதிகளை மாற்றியதாக இந்த குரல் பதிவில் தெரிவிக்கப்படுகின்றது.
அரச புலனாய்வாளர்களின் அறிக்கை
பிள்ளையானின் வழக்கில் நீதிபதியாக இருந்த நீதிபதியை மாற்றி புதிய நீதிபதியை நியமித்ததன் மூலமே அவர் வெளியாகியமை குறிப்பிடத்தக்க விடயம்.
உண்மையிலேயே நீதித்துறைக்கு பொறுப்பாக இருந்த முன்னாள் அமைச்சர் என்ற ரீதியில் இதற்கு நீங்கள் பதில்கூற வேண்டும். இதில் உங்களது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காணொளியில் தெரிவிக்கின்ற விடயங்களை நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சியை நான் எடுக்க விரும்புகின்றேன்.
முக்கிய அரச புலனாய்வாளர்களின் அறிக்கையின்படி ஆதாரங்கள் அனைத்தும் பிள்ளையானுக்கு எதிராக இருந்ததன் காரணமாக புலனாய்வு அதிகாரிகளும் மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே நீதித்துறைக்கு பொறுப்பான முன்னாள் அமைச்சரே இந்த விடயங்கள் தற்போது காணொளிகளாக வெளிவந்துக் கொண்டிருக்கின்றது.
சனல் 4 அலைவரிசையில் இவைகள் இன்னும் வரவில்லை எதிர்காலத்தில் இதைவிட நிறைய விடயங்கள் வர இருக்கின்றது என்பதை அறிகின்றோம்.
ஆகவே இலங்கையின் நீதித்துறையும் அதன் சுயாதீன தன்மை தொடர்பாகவும் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு உடனடியான தீர்வினை பெற்று தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.'' என தெரிவித்துள்ளார்.