அநுர அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்: சாணக்கியன் சூளுரை

Sri Lankan Tamils Tamils Shanakiyan Rasamanickam Election
By Rakesh Mar 24, 2025 03:13 AM GMT
Report

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அநுர அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள் எமது மக்களின் ஆணையுடன் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் ஆட்சி அமைப்போம்" இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சியினுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படவில்லை. மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு சபையின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் வெளியான பகீர் தகவல் - கொலைக்கு முன் நடந்தவை அம்பலம்

தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் வெளியான பகீர் தகவல் - கொலைக்கு முன் நடந்தவை அம்பலம்

தமிழரசுக் கட்சி

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல தமிழரசுக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்துள்ள அனைத்து வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதேபோல் நாம் அனைத்து சபைகளிலும் ஆட்சியமைப்போம்.

அநுர அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்: சாணக்கியன் சூளுரை | Sanakiyan Vows Tamil Party Win In North East

வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சியை வீழ்த்தவே முடியாது.

எமது தலைவர் பிரபாகரனினுடைய பெயரை உச்சரிக்கும் அளவுக்கு தேசிய மக்கள் சக்தியினர் வந்துள்ளார்கள் என்பதற்கு வாழ்த்துகின்றோம். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது பெயரையும், அவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறை மண்ணையும் கூறுகின்றமை வாழ்த்துக்குரிய விடயமாகும்.

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

 உள்ளூராட்சி சபைத் தேர்தல்

தேசிய மக்கள் சக்தியினரின் செயற்பாடு வெறும் வாயளவிலானது மாத்திரமே தவிர, இந்த ஆறு மாத காலப்பகுதியில் அவர்கள் எதுவும் செய்யவில்லை. மிக முக்கியமாக எமது வடக்கு மாகாணத்துக்குத் தேசிய மக்கள் சக்தியினர் எதுவும் செய்யவில்லை. செய்யப் போவதும் இல்லை. இதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.

அநுர அரசுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்: சாணக்கியன் சூளுரை | Sanakiyan Vows Tamil Party Win In North East

பட்டலந்த ஆணைக்குழு பற்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தேசிய மக்கள் சக்தி அரசு, பரணகம ஆணைக்குழு, எல்.எல்.ஆர்.சி. அறிக்கை, உடலகம ஆணைக்குழு ஆகியவற்றில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசுவதற்குத் தகுதியற்றவர்கள். இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசுக்குத் தமிழ் மக்கள் சிறந்த பாடத்தைப் புகட்டுவார்கள்"என குறிப்பிட்டுள்ளார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US