சாணக்கியனின் இரகசிய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை! உண்மைகளை அம்பலப்படுத்தும் வைத்தியர்
கடந்த 22 ஆம் திகதி களுவாஞ்சிக்குடியில் சாணக்கியன் தலைமையில் இடம்பெற்ற இரகசிய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என மட்டக்களப்பு மாவட்ட வைத்தியர் சிறிநாத் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த இரகசிய கூட்டத்தில் தான் கலந்துக்கொண்டதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அதனை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தேர்தலில் யாரும் தமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், இதன்போது தான் அலுவலகத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பரப்பில் உள்ள பல வளங்கள் சுரண்டப்பட்டு வரும் நிலையில், வைத்தியத்துறையின் ஊடாக நிவர்த்தி செய்யும் விடயங்களை தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இருப்பினும் பல அழுத்தங்கள் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





துளி கூட மேக்கப் போடாமல், முகத்தில் சுருக்கங்கள் உடன் தொகுப்பாளினி டிடி வெளியிட்ட புகைப்படம்.. எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

அதிரவைக்கும் திருப்பம்... இஸ்ரேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரும் உலகளாவிய யூத பிரபலங்கள் News Lankasri

இன்னும் 2 நாட்களில் நடக்கவிருக்கும் புதன் பெயர்ச்சி- தலைவிதியே மாறப் போகும் ராசியினர் யார்? Manithan
