நாடாளுமன்ற உறுப்பினராகிறாரா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்..! அவரே வெளியிட்டுள்ள தகவல்
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றப் போவதில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார்.
மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை இன்று (02.05.2026) சந்தித்து ஆசி பெற்ற பின் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சட்டத்திலிருந்து தப்பிச் செல்ல எவ்விதத்திலும் இடமளிக்கப் போவதில்லை. முன்னைய நிலைமையுடன் ஒப்பிடுகையில், தற்போது நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதை பெருமளவில் கட்டுப்படுத்துவதற்கு முப்படைகளும் பொலிஸாரும் விசேட பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
திறைசேரி செயலாளர் பதவி நீக்கப்படுகிறாரா: ஜனாதிபதி அநுரவிற்கும் சிக்கல் - அவரின் பதவியும் பறிபோகுமா..!
தேவையான நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்தே விநியோக நடவடிக்கைகளை அதிகளவில் முன்னெடுத்து வருகின்றனர். அவ்வாறு செயற்படுபவர்களை கைது செய்து நாட்டிற்கு கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் இலங்கையின் முப்படைகளையும் இணைப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.
மிக விரைவில் முப்படை உறுப்பினர்களை ஹைட்டி நாட்டிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பாதுகாப்புப் படைகளில் நிலவும் ஆளணி பற்றாக்குறையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.