யாழில் மயங்கி விழும் மாடுகள்!கால்நடை வளர்ப்பாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
தற்போது நிலவி வரும் கடும் வெயில் காரணமாக யாழ்ப்பாணம்- ஊர்காவற்துறை பிரதேசங்களில் மாடுகள் ஆபத்தான நிலைமைகளை எதிர்நோக்கியுள்ளன.
பல மாடுகள் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள முடியாது மயங்கி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சில மாடுகள் இறந்துள்ளதாக பொது மக்கள் கூறுகின்ற போதும் அவற்றை உறுதிப்படுத்த முடியவில்லை.
நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
அறிவுறுத்தல்
இருப்பினும் வெயிலின் தாக்கத்தால் பல மாடுகள் மயங்கி வீழ்ந்த நிலையில் உடனடியாக சம்பவ இடங்களுக்கு செல்லும் பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி அவசர சிகிச்சைகளை அளித்து மாடுகளை ஆபத்திலிருந்து காப்பாற்றி வருகின்றார் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக வெயில் காரணமாக பால் உற்பத்தி குறைதல், கரைகுட்டி பிரசவித்தல் போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன.
எனவே போதிய அளவு நீர் அருந்தும் வகையில் மாடுகளை பராமரிக்குமாறும் கடும் வெயில் நேரங்களில் வெட்டை வெளியில் கட்டிவைத்தல் போன்ற நடவடிக்கைகளை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றது.




பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam