வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்கவும்..! சம்பத் வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
கண்டி, தலதா வீதியில் உள்ள தனது கிளை மற்றும் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று சம்பத் வங்கி தெரிவித்துள்ளது.
சம்பத் வங்கி சிறப்பு அறிக்கையொன்றினை வெளியிட்டு இதற்கு விளக்கமளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்
சமூக ஊடகங்களில் பரவுவது போன்று சம்பத் வங்கியின் எந்த அதிகாரியும் விளக்கமறியலில் வைக்கப்படவில்லை என்பதை வங்கி உறுதி செய்கின்றது.

வாடிக்கையாளர் ஒருவர் பெற்ற சுமார் ரூ. 51 மில்லியன் கடன் வசதி தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த தவறான தகவல் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் வங்கி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
இருப்பினும், சம்பந்தப்பட்ட விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால், வங்கியால் இது குறித்து மேலதிக கருத்துக்களை தெரிவிக்க இயலாது.

வங்கி மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராகக்கூறப்படும் அனைத்து தவறான அறிக்கைகளையும் குற்றச்சாட்டுகளையும் வங்கி கடுமையாக மறுக்கின்றது.
மேலும் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான தகவல்கள் குறித்து வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை! வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் புதிதாக வாகனம் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி செய்தி - விலைகளில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்