உப்புச்சப்பற்ற அரசியல் தீர்வை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! ரணிலுக்கு வலியுறுத்தவுள்ள சம்பந்தன்
இலங்கையில் நீண்டகாலமாகப் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும், அது வலுவான - நிரந்தர தீர்வாக இருக்க இருக்க வேண்டும், உப்புச்சப்பற்ற தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று மாலை சந்திக்கும் போது வலியுறுத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தீர்வுக்கான பேச்சில் எம்மை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்படுவோம். நாம் தமிழ் மக்களின் பிரதிநிதிகள். அவர்களின் விருப்பங்களை - கோரிக்கைகளை நாம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.
தமிழ் மக்கள் சார்பான கோரிக்கைகளையே ஜனாதிபதியிடம் கடந்த சந்திப்புகளில் முன்வைத்துள்ளோம். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் கடமை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்படும்
அத்துடன் தமிழர் தீர்வுக்கான பயணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று மாலை சந்திப்பு ஒன்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையிலேயே சம்பந்தன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் (தமிழரசுக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரும் பங்குபற்றுவர் என அறியமுடிகின்றது.

இதேவேளை, இந்தச் சந்திப்பில் அரச தரப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் பங்கேற்பர் என்று கூறப்படுகின்றது.
இரகசிய தகவல் வழங்கும் கைதிகளை இலக்கு வைத்து தாக்குதல்! பின்னணியில் மிகப்பெரும் சதி - நீதி அமைச்சரின் அதிர்ச்சித் தகவல்
நீர்கொழும்பு சிறை மோதல்: கைதிகளால் அடித்து நொருக்கப்பட்ட CCTV கமராக்கள் - தீவிரமடையும் சிஐடி விசாரணை
தமிழருக்கு சொந்தமான பாரிய பீச் ஹோட்டல் எரியூட்டப்பட்ட கொடூரம்! மைக்கேல் ராபர்ட்ஸ் என்பவரால் வெளியிட்டுள்ள தகவல்கள்
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri