சாணக்கியம் மிக்க மென்வலுத்தலைவர் சம்பந்தன்: சிறீதரன் எம்.பி தெரிவிப்பு
அரசியல் முதிர்ச்சியும், சாணக்கியமும், எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் தலைமைத்துவ ஆளுமையும் மிக்கவராக, தன் இறுதிக்கணம் வரை தமிழ்த்தேசியத் தளத்தில் பயணித்த அரசியல்வாதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் வெற்றிடம் நிரப்ப முடியாதது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, கிளிநொச்சி மாவட்டக் கிளையினால் இன்றையதினம் (07.13.2025) கட்சியின் மாவட்டக் கிளைப் பணிமனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அமரர் இரா.சம்பந்தன் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டது.
இதன்போது, அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, நினைவுரை ஆற்றும் போதே சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அஞ்சலி நிகழ்வு
இந்நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கரைச்சி பிரதேச சபையின் மேனாள் உறுப்பினரும், ஆசிரியருமான அருணாசலம் சத்தியானந்தம், கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை உப தலைவரும் மேனாள் கல்வி அமைச்சருமான தம்பிராஜா குருகுலராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் ஆகியோர் நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
அத்துடன், மாவட்டக் கிளையின் செயலாளர் வீரவாகு விஜயகுமார், கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உப தவிசாளர்கள், உறுப்பினர்கள், மேனாள் உறுப்பினர்கள், மாவட்டக் கிளை உறுப்பினர்கள் மற்றும் வட்டாரக் கிளைகளின் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
