சிங்களமயமாகும் தமிழர் தேசம்! கொழும்பில் நடத்தப்பட்ட முக்கிய சந்திப்பு
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை தற்போதைய ஆட்சியாளர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தச் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸ் ஆகியோரை கொழும்பில் நேரில் சந்தித்த போது அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் சம்பந்தன் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கைப் பௌத்த - சிங்கள மயமாக்கும் நோக்குடன் அரசாங்கம் செயற்படுகின்றமை, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காமல் அரசாங்கம் இழுத்தடிக்கின்றமை தொடர்பிலும் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
