இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதி
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமனற் உறுப்பினர் எம்.எ சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரை எமது செய்திசேவை தொடர்புகொண்ட போதும் அது பயனளிக்கவில்லை.
அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வீட்டிற்கு இது தொடர்பில் எமது செய்திச்சேவை தொடர்பு கொண்ட போது அவரது மகன் கருத்து தெரிவித்திருந்தார்.
“சம்பந்தன் அவர்களை வழமையாக வீட்டிற்கு வந்து பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் அவரது உடல்நிலை பலவீனப்பட்டுள்ளமையால் அவரை கட்டாயம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.
எனவே ஐயா தற்போது கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருதாக” தெரிவித்தார்.
இரா.சம்பந்தனுக்கு தற்போது 90 வயதினை எட்டியுள்ள நிலையில் வயோதிபம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளையும் புறக்கணித்திருந்தார்.
எனினும் அண்மையில் ரணில் விக்ரமசிங்கவுடனான இனப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்தி: ராகேஷ்





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
