சம்மாந்துறை பிரதேச தவிசாளருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்கொடி
சம்மாந்துறை பிரதேச தவிசாளர் பெண்களை பாரபட்சமாக நடாத்துவதுடன் எம்மால் திட்டமிட்டு வழங்கப்படும் அபிவிருத்தி நிகழ்வுகளை புறக்கணிப்பு செய்வதாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் விசேட செய்தியாளர் சந்திப்பினை நடாத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
இம்முறை எனது 'பட்ஜட்' இற்கு ஆதவரவளிக்கவில்லை; ஆகையால் இந்த விடயம் சம்பந்தமாக பேச நீங்கள் அருகதையில்லை' - என சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் நேரடியாக மறுத்ததாக பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
முன்மொழிவுகள்
அத்துடன் பெண்கள் வலுவூட்டல், கௌரவிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து தவிசாளரிடம் அனுமதி கோரிய போதே இவ்வாறு மறுத்தார்.

இது மாத்திரமன்றி சம்மாந்துறை பிரதேச சபையின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி கண்டுள்ளது.தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகிறார்.
சபையில் முன்வைக்கப்படும் தீர்மானங்கள் காகிதத்தில் மட்டுமே இருக்கின்றன. அபிவிருத்திக்கான நிதி இல்லை என்ற காரணம் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் முன்மொழிவுகள் புறக்கணிக்கப்படுகின்றன.
சட்ட விதி
மேலும் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் ஜனநாயக முறையிலும் உள்ளூராட்சி சட்ட விதிகளின்படியும் நிறைவேற்றப்படவில்லை.

'வரவு–செலவுத் திட்டத்தில் என்ன உள்ளடக்கப்பட்டிருந்தது என்பதுகூட உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிராக வாக்களித்தோம். ஆனால் அதன்பின்னர் அரசியல் ரீதியான பழிவாங்கல் இடம்பெற்று வருகிறது என கூறினர்.
சுரேஸ் சலேவின் உடலில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள அறிகுறிகள் ..! சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri