இலங்கையில் கத்தோலிக்க தேவாலயமொன்றில் ஒரு பாலினத் திருமணம்
இலங்கையில் உள்ள கத்தோலிக்க தேவாலயமொன்றில் அண்மையில் ஒரு பாலினத் திருமணம் நடைபெற்றதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளிப்படுத்திய தகவல், கத்தோலிக்க சமூகம் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் உரையாற்றிய அவர், இரண்டு இலங்கை பெண்கள் திருமணம் நடத்தும் அருட்தந்தையை ஏமாற்றி தேவாலயத்தில் திருமணம் நடந்ததாக கூறினார்.
அதில் ஒருவரின் தோற்றம் ஹார்மோன் மாத்திரைகள் காரணமாக மாற்றப்பட்டதால் அருட்தந்தை தவறாக வழிநடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
பரவலான விவாதம்
ஒரே பாலினத் திருமணங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கர்தினால், இவ்வாறான உறவுகள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், LGBTQ+ சுற்றுலாவை ஊக்குவிக்கும் அரசாங்க முயற்சிகளை அவர் கண்டித்தார். இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும் எச்சரித்தார்.
எனினும், ஒரே பாலின நாட்டமுள்ளவர்களை கருணையுடன் நடத்த வேண்டும் என்றும், ஆனால் வெளிப்புற செல்வாக்கால் வாழ்க்கை முறையை திணிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்துகள் கத்தோலிக்க சமூகத்தில் மட்டுமின்றி, அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களிலும் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



