இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்த எம்.பி
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு இரு மனைவிகள். இருவரும் மத்திய வங்கியில் பணியாற்றுகின்றனர்.அவர்களில் இரண்டாவது மனைவி மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன் மகேந்திரன் பதவி வகித்த காலத்தில் பதவியில் இருந்தார் என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு)விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு
அத்தோடு மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற போது அர்ஜுன் மகேந்திரனின் கடவுச்சீட்டை வழங்க உத்தரவிட்ட நீதிபதி யார் என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் ரங்க திசாநாயக்கவுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்து உரையாற்றியுள்ளார்.
இதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர்,
தான் குற்றவாளியல்ல நேர்மையானவர் என காட்டிக் கொள்வதென்றால் இவற்றுக்கு பதிலளிக்க வேண்டும்.மற்றவர்களுக்கு குற்றம்சாட்டும் போது தான் நேர்மையானவராக இருக்க வேண்டும்.எனக்கெதிராக மூன்று வழக்குகள் உள்ளன.
நான் இதை கூறியதனால் அதற்கெதிராக கடும் குற்றப்பத்திரிகை ஒன்றையும் தாக்கல் செய்ய கூடும் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




